In Kerala, Prasana jothidam is a familiar one. If a person has a particular question at a specific time, the answer can be obtained accurately by prasanam method.
Prasana jothidam is a branch of astrology. The answers and prediction were done similar to that of horoscope. Prasana jothidam is a traditional art which is in existence from the vedic period. In the present generation prasana jothidam became a familiar art and it is widely used across the world. Prasanna jothidam gives accurate results and it gives deep knowledge in analyzing horoscope.
Based on Prasana Jothidam the following details can be obtained:
*One can know how to succeed in life.
*What are the hurdles one is facing towards achievement?
*How to overcome all problems?
*What pariharam has to be done to overcome problems by prasana jothidam
*What prayer has to be performed?
*What pariharam has to be performed?
If the position of the planets, dasa period were perfect in one’s birth chart but still no good events happens in one’s life then through prasanam the causes like previous birth karma palan and the effect of sin done by their ancestors and the various effects of dosha can be predicted by different ways of prasanam.
Of all the prasanam, deva prasanam, thambula prasanam, hora prasanam, aaruda prasanam, sozhi prasanam, kerala ashta mangala prasanam, nadi prasanam, nimitha prasanam, gowri prasanam, gadigara(clock) prasanam, jamakkol prasanam, horarai prasanam, sagadevar prasanam, nakashtra prasanam are the different types of prasanam were in existence.
ASTA MAGALA PRASANAM includes:
- Deva prasanam
- Kuladeiva prasanam
- Sarpa dosham
- Pithur dosham (a) ancestor’s dosham
- Curse by guru
- Brahmana Curse
- Pretha dosha in the living place
- Manai dosham and other dosham in the living place
- Seivinai dosham
- Idumarundhu dosham
The problem which arises due to the above said dosham or there is a break in all the work, sudden death, no boy child in the family, all these issues can be identified through asta mangala prasanam. In particular, Idumarunthu dosham, one can control the ill effects of dosham one has to perform garuda panchakshara mantra in panchakavyam ghee for forty one days. After seeing asta mangala prasanam, pariharam has to be done within six months of time or else it has to be seen again. In our astrology research center, sozhi prasanam, Vetrilai prasanam, jamakol prasanam were done. Astamangala prasanam has to be seen in the house of the affected person.
For effective and best results, lighting lamps and drawing kolam will be an added advantage. Deva prasanam has to be seen in the temple premises. The power of the lord in the temple or any defects or any bad things have happened in the past can be predicted. In addition to this, we can find whether any pariharam has to be done for good spirit or on which good spirit is angry for any issues.
ப்ரஸ்ன ஜோதிடம் கேரளாவில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஒருவர் எந்த நேரத்தில் எந்த நோக்கத்தில் கேள்வி கேட்கிறாரோ அதற்குண்டான விடையை ப்ரஸ்னம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.”
ப்ரஸ்ன ஜோதிடம் ஜோதிடத்தின் ஒரு கிளையாக உள்ளது. அதனுடைய பதில்கள் மற்றும் கணிப்புகள் ஜாதகத்தின் அடிப்படையில் பல காரணிகளால் உருவாக்கப்பட்டது. ப்ரஸ்ன ஜோதிடம், வேத காலத்தில் இருந்தே நடைமுறையில் இருக்கும் ஒரு பண்டைய கலை. தற்போதைய காலத்தில், ப்ரஸ்ன ஜோதிடம் மிகவும் பிரபலமானதகவும் மற்றும் உலகம் முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் கலையாகவும் விளங்குகின்றது. ப்ரஸ்ன ஜோதிடம் சிறந்த பதில்களை மற்றும் ஆழ்ந்த ஜோதிட நுண்ணறிவை வழங்கும் ஒரு கருவியாக விளங்குகின்றது.
ப்ரஸ்ன ஜோதிடம் மூலம்
- உங்கள் வாழ்கையில் வெற்றி அடைவது எப்படி?,
- உங்கள் முன்னேற்றத்திற்கு என்னென்ன தடைகள் உள்ளன?,
- அவற்றிலிருந்து மீள்வது எப்படி?,
- அவர் பிரசன்ன ஜோதிடம் மூலம் உங்கள் பிரச்சனைகளுக்கு என்ன பரிகாரங்கள் செய்யவேண்டும் ?,
- என்ன ப்ராயாசித்தங்கள் செய்யவேண்டும் ?,
- என்ன பிரார்த்தனைகள் செய்யவேண்டும் ?,
என்பதை கண்டறியலாம். ஜாதகம் இல்லாதவர்களும் ப்ரஸ்ன ஜோதிடத்தின் மூலம் தங்கள் பிரச்சனைகளிலிருந்து மீளும் வழியை கேட்டு அறியலாம். இந்த ப்ரஸ்ன ஜோதிட முறையில் எளிதாக நாம் பதில்களை தெரிந்துகொள்ளலாம்.
அஷ்ட மங்கல ப்ரஸ்னம்
ஒருவருடைய ஜனனகால ஜாதகத்தில் கிரக நிலைகள் நன்றாக இருந்தும் தசாபுத்தி, அந்திரங்களும் நல்ல நிலையில் இருந்தாலும் அந்த ஜாதகருக்கு நல்லது நடக்காமல் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் பட்சத்தில் அதற்கான கர்ம வினையையும் – முன்னோர்கள் செய்த பாவத்தால் உண்டான வினைப்பயனையும் – தெய்வ தோஷங்களையும் மற்றும் பல தோஷங்களையும் கண்டறிய பல முறைகளில் ப்ரஸ்னம் போடப்படுகிறது.
இதில் தேவ ப்ரஸ்னம், தாம்பூல ப்ரஸ்னம், ஹோரா ப்ரஸ்னம், ஆரூட ப்ரஸ்னம், சோழி ப்ரஸ்னம், கேரள அஷ்ட மங்கல ப்ரஸ்னம், நாடி ப்ரஸ்னம், நிமிர்ந்த ப்ரஸ்னம், கெளரி ப்ரஸ்னம், கடிகார ப்ரஸ்னம், ஜாமக்கோள் ப்ரஸ்னம், ஹோரை ப்ரஸ்னம், சகாதேவர் ப்ரஸ்னம், நட்சத்திர ப்ரஸ்னம் என பல வகைகள் உள்ளது.
அஷ்ட மங்கல ப்ரஸ்னத்தின் மூலமாக
- தெய்வ அனுகூலம்
- குலதெய்வ அனுகூலம்
- சர்ப்ப தோஷம்
- பிதுர்தோஷம் அதாவது மூதாதையர் தோஷம்
- குரு சாபம்
- பிராமண சாபம்
- வசிக்கும் இடத்தில் உள்ள பிரேத தோஷம்
- மனை தோஷம், வசிக்கும் இடத்தில் உள்ள தோஷங்கள்
- செய்வினை தோஷம்,
- இடுமருந்து தோஷம் (கைவிஷம்)
போன்ற தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகளையும் எந்த காரியத்தை எடுத்தாலும் தடைகள் வருவது – துர்மரணங்கள், வீட்டில் ஆண்வாரிசு இல்லாமல் போதல் போன்ற எளிதில் கண்டுபிடிக்க முடியாத பல விஷயங்களை அறிந்து கொள்ள இயலும்.
குறிப்பாக இடுமருந்து தோஷத்திற்கு கருட பஞ்சாட்சர மந்திரத்தை பஞ்சகவ்யம் நெய்யில் தினமும் ஆயிரத்தெட்டு உரு வீதம் நாற்பத்தொரு நாள் செய்து கொடுத்தால் இந்த தோஷத்தைக் கட்டுப்படுத்தும்.
அஷ்ட மங்கல ப்ரஸ்னம் பார்த்து அதன்மூலம் பரிஹாரம் செய்ய வேண்டியிருப்பின் ஆறு மாதத்திற்குள் செய்து விட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் அஷ்ட மங்கல ப்ரஸ்னம் பார்க்க வேண்டும்.
நம்முடைய ஜோதிட மையத்தில் சோழி ப்ரஸ்னம், வெற்றிலை ப்ரஸ்னம், ஜாமக்கோள் ப்ரஸ்னம் பார்க்கப்படும்.
அஷ்ட மங்கல ப்ரஸ்னம் என்பது பிரச்சனை உள்ள நபரின் இல்லத்தில் வைத்து பார்க்க வேண்டும். தீபமேற்றுதல், கோலம் வரைதல் போன்ற சில கிரியைகளும் நிமித்தங்களும் துல்லியமான பலனை அறிய உதவும்.
தேவ ப்ரஸ்னம் என்பது கோயில்களுக்காக பார்க்கப்படும் ப்ரஸ்னம் ஆகும். கோயிலில் உள்ள தெய்வத்தின் சக்தி, குறை ஏதும் உள்ளதா, கோயிலில் தவறுகள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறியலாம். மேலும் தெய்வ சக்தி அல்லது தெய்வம் கோபமாக உள்ளதா என்பதையும் கண்டறியலாம். அதற்குரிய பரிஹாரமும் செய்ய வேண்டும்.